×

பெரியார், எம்.ஜி.ஆர் சிலையைத் தொடர்ந்து அண்ணா சிலைக்கும் அவமரியாதை! – கன்னியாகுமரியில் பரபரப்பு

பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது பழைய பல்பு, காவி கொடி கட்டி சிலர் அவமரியாதை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தியே தீருவது என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைவது போல தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக சில சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. கந்த சஷ்டி கவசத்தை வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையை உருவாக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ராமரைச்
 

பெரியார், எம்.ஜி.ஆர் சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது பழைய பல்பு, காவி கொடி கட்டி சிலர் அவமரியாதை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தியே தீருவது என்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைவது போல தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக சில சம்பவங்கள் நடந்து வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.


கந்த சஷ்டி கவசத்தை வைத்து தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையை உருவாக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ராமரைச் சொல்லி இங்கு வாக்கு பெற முடியாத நிலையில் முருகனைப் பிடித்துக் கொள்வது சரியானதாக இருக்கும் என்று தலைவர்கள் கூறுகின்றனர்.


கந்தசஷ்டி கவசத்தை அசிஙகப்படுத்தி வீடியோ வெளியிட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலையில் தற்போது அதை பிரச்னை ஆக்கினார்கள். ஆறு மாதம் எதற்காக காத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. அதைத் தொடர்ந்து பெரியார் சிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோவையில் கோவில்கள் எரிக்கப்பட்டன. சாலையில் வேல் வரையப்பட்டது. இரவோடு இரவாக வேல் கட்டஅவுட் முளைத்தது. தற்போது கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை

அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. சிலை மீது பழைய பல்பு, மாலை போடப்பட்டுள்ளது. சிலை முன்பு இருந்த கைப்பிடியில் காவிக் கொடி கட்டப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
தமிழகத்தை கலவர பூமியாக்க துடிக்கும் இதுபோன்ற நபர்கள் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.