×

வரைவு வாக்காளர் பட்டியல்: தேர்தல் அதிகாரி ஆலோசனை!

சட்டமன்றத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருக்கும் சூழலில், தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் குழு அறிக்கை, களப்பணி உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு
 

சட்டமன்றத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருக்கும் சூழலில், தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் குழு அறிக்கை, களப்பணி உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட மாபெரும் தலைவர்கள் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இது ஒரு புறமிருக்க தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவ.16 வெளியாகும் என்றும் இறுதி பட்டியல் ஜனவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் தற்போது தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.