×

உணவின்றி தவிப்பவர்களின் பசியாற்றும் சகோதரர்கள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடுகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10ம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பலர், உணவுக்கே திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து தனியார் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் உணவு வழங்கி வருகிறார்கள். அம்மா உணவகங்களும் செயல்படுகிறது. இந்த நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த சகோதரர்கள் முஜிபுர்ரகுமான் மற்றும் பிலால் ஹூசைன் பசியால் வாடுவோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருவது மக்களின் கவனத்தை
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடுகிறது. பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10ம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் பலர், உணவுக்கே திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து தனியார் தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வலர்களும் உணவு வழங்கி வருகிறார்கள். அம்மா உணவகங்களும் செயல்படுகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த சகோதரர்கள் முஜிபுர்ரகுமான் மற்றும் பிலால் ஹூசைன் பசியால் வாடுவோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வருவது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்கள் இருவரும் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே முஜிப் பிரியாணி என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்கள். அந்த ஓட்டலின் வாசலில் ஒரு டேபிள் போட்டு அதில் உணவு பொட்டலங்களை அடுக்கி வைத்துள்ளனர். விலையில்லா உணவு, பசித்தோர் பசியாறலாம் என அவர்கள் எழுதி போட்டுள்ளனர்.

பசியால் வாடும் பலர் இந்த உணவு பொட்டலங்களை எடுத்துச் சென்று பசியாற்றிக் கொள்கின்றனர். கடந்த ஆண்டும் இவர்கள் இந்த சேவையை செய்துள்ளனர். சுமார் 25 ஆயிரஹதுக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை விநியோகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.