×

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி !

நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலிலுக்கு ஏராளமான பக்தர்கள் சிரமம் பாராமல் வந்து செல்வது வழக்கம். கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதமாக கோயில்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் நேற்று ஊரடங்கு தளர்வினால் அனைத்து கோயில்களும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர்
 

நான்கு திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ள இந்தக் கோயிலிலுக்கு ஏராளமான பக்தர்கள் சிரமம் பாராமல் வந்து செல்வது வழக்கம்.

கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதமாக கோயில்கள் மூடப்பட்டு இருந்த நிலையில் நேற்று ஊரடங்கு தளர்வினால் அனைத்து கோயில்களும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை பவுர்ணமி என்பதால் பக்தர்கள் மாஸ்க் அணிந்து கோவிலுக்கு வர கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.