×

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதற்கான தடுப்பு பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் உடல்நலக்குறைவு காரணமாக நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவபரிசோதனைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்று தகவல் வெளியானாலும் கூட,
 

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதற்கான தடுப்பு பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் உடல்நலக்குறைவு காரணமாக நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவபரிசோதனைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வந்துள்ளார் என்று தகவல் வெளியானாலும் கூட, துணை முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் பழனிசாமி 12 மணிக்கு மருத்துவமனை வருகை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.