×

நடக்க முடியாத மகளை கையில் தூக்கி சென்ற தந்தை : அரசு மருத்துவமனையின் அலட்சியம்!?

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு மகளை செல்வம் அழைத்து வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்த நிலையில் சிறுமியால் நடக்கமுடியவில்லை எனத் தெரிகிறது. ஆனால் மருத்துவமனை சார்பில் சக்கர நாற்காலியோ அல்லது ஸ்ட்ரெச்சரோ கொடுக்கப்படவில்லை. இதனால் தந்தை செல்வம் தனது மகளை தூக்கி கொண்டு நடந்தார். இதனை அங்கிருந்த ஊடகத்தினரும், பொதுமக்களும் செல்போனில் பதிவு செய்தனர். இதனால் விஷயம் விபரீதமாக முடிந்து விடும் என
 

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு மகளை செல்வம் அழைத்து வந்தார்.

பின்னர் சிகிச்சை முடிந்த நிலையில் சிறுமியால் நடக்கமுடியவில்லை எனத் தெரிகிறது. ஆனால் மருத்துவமனை சார்பில் சக்கர நாற்காலியோ அல்லது ஸ்ட்ரெச்சரோ கொடுக்கப்படவில்லை. இதனால் தந்தை செல்வம் தனது மகளை தூக்கி கொண்டு நடந்தார்.

இதனை அங்கிருந்த ஊடகத்தினரும், பொதுமக்களும் செல்போனில் பதிவு செய்தனர். இதனால் விஷயம் விபரீதமாக முடிந்து விடும் என பயந்து உடனடியாக மருத்துவமனை சார்பில் ஸ்ட்ரெச்சர் உதவி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களில் மருத்துவமனை நிர்வாகம் அக்கறையுடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.