×

ஏற்காடு ஏரியில் ஆகாய தாமரை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை.!

சேலம் ஏரியில் ஆகாயத்தாமரைகள் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. உடனடியாக இந்த ஏரியை தூர்வாரி ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு தமிழக சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட ஏற்காடு மலை பகுதி குளிர்ச்சியான சரியான நிலையை கொண்டுள்ளது. 20 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ள ஏற்காடு நகரை அடைந்த உடன் முதலாவதாக காணப்படும் வண்டி ராமன் ஏரியில்
 

சேலம்

ஏரியில் ஆகாயத்தாமரைகள் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. உடனடியாக இந்த ஏரியை தூர்வாரி ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு தமிழக சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட ஏற்காடு மலை பகுதி குளிர்ச்சியான சரியான நிலையை கொண்டுள்ளது. 20 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ள ஏற்காடு நகரை அடைந்த உடன் முதலாவதாக காணப்படும் வண்டி ராமன் ஏரியில் தான் தமிழ்நாடு அரசின் சார்பில் படகு சவாரி செய்யப்பட்டு வருகிறது.

allowfullscreen

தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக ஏரி முழுவதும் ஆகாயத்தாமரைகள் மட்டும் நீர் வாழ் தாவரங்கள் ஏரியை ஆக்கிரமித்து உள்ளது. சுற்றுலாப் பயணிகள் முழுமையாக படகு சவாரியை ரசிக்க முடியாத அளவிற்கு ஏரி முழுவதும் நீர் வாழ் தாவரங்கள் படர்ந்து வருகிறது. எனவே ஏற்காடு ஊராட்சி நிர்வாகம் ஏரியை ஆக்கிரமித்து உள்ள ஆகாய தாமரை மற்றும் நீர்வாழ் தவறுகளை உடனடியாக அப்புறப்படுத்தி ஏரியை தூர்வார வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் அழகில் ஏற்காடு ஏரியை பராமரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.