×

‘தெய்வத்துள் தெய்வம்’ தத்ரூபமான காட்சிகளை கண்முன் நிறுத்தும் படைப்பு!

‘தெய்வத்துள் தெய்வம்’ மேடை நாடகத்தின் முதல் எபிசோடு TTN Bakthi யூடியூப் சேனலில் இன்று வெளியாகியுள்ளது. ‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தின் படைப்பு குறித்து இயக்குநர் இளங்கோ குமணன் கூறுகையில், “நம்மிடையே நடமாடும் தெய்வமாக வணங்கப்படும் காஞ்சி மஹா பெரியவாளின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாற்றை 4 பருவங்களாக பிரித்து ஒரு கோர்வையாக ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்துள்ளோம். இந்த நாடகத்தில் மொத்தம் 108 கலைஞர்கள் தங்களின் பங்கை அர்ப்பணித்துள்ளனர். மஹா பெரியவாளின் வரலாற்று மேடை
 

‘தெய்வத்துள் தெய்வம்’ மேடை நாடகத்தின் முதல் எபிசோடு TTN Bakthi யூடியூப் சேனலில் இன்று வெளியாகியுள்ளது.

‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தின் படைப்பு குறித்து இயக்குநர் இளங்கோ குமணன் கூறுகையில், “நம்மிடையே நடமாடும் தெய்வமாக வணங்கப்படும் காஞ்சி மஹா பெரியவாளின் நூறாண்டு கால வாழ்க்கை வரலாற்றை 4 பருவங்களாக பிரித்து ஒரு கோர்வையாக ‘தெய்வத்துள் தெய்வம்’ என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்துள்ளோம். இந்த நாடகத்தில் மொத்தம் 108 கலைஞர்கள் தங்களின் பங்கை அர்ப்பணித்துள்ளனர். மஹா பெரியவாளின் வரலாற்று மேடை நாடகம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இதுவரை 29 முறை மேடை ஏறியுள்ளது.

இந்த நாடகத்தை பார்த்த ஏராளமானோருக்கு மீண்டும் இதை எப்போதும் பார்ப்போம் என்ற ஆவலை தூண்டியது. இனியும் தூண்டும்… ஒரு தமிழ் திரைப்படத்தை இயக்க எவ்வளவு செலவு ஆகுமோ அதே அளவு தொகையை செலவு செய்து தெய்வத்துள் தெய்வத்தை மக்களுக்காக காட்சிப்படுத்தியுள்ளோம்” என தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

‘தெய்வத்துள் தெய்வம்’ நாடகத்தை பார்ப்பது என்பதே ஒரு அனுபவம்தான். மிகவும் எளிமையான மொழியில் சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த காலத்து பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், தொழில், வாழ்க்கை முறை ஆகிய அத்துணையும் நிஜத்தில் பார்ப்பது போலவே காட்சி படுத்தியிருப்பது கண்டவுடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹா பெரியவாளின் இளமை காலத்திலிருந்து தொடங்கும் இந்த நாடகத்தின் முதல் பகுதி உங்கள் பார்வைக்கு…. வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்:

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு TTN BAKTHI யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகவுள்ள அடுத்தடுத்த பகுதிகளை காண தவறாதீர்கள்….