×

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்துக்கு வந்த தீபக்… அனுமதித்த போலீஸ்! – திடீர் பரபரப்பு

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு அதன் வாரிசு தாரரான தீபக் வந்தபோது அவரை போலீசார் அனுமதிக்க மறுத்ததாக செய்தி வெளியானது. இதை போலீசார் மறுத்துள்ளனர். ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என்று சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் தீபக். இவர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு நேற்று பிற்பகல் வந்தார். அந்த வீட்டை தற்போது போலீசார் பாதுகாத்து வருகின்றனர். அவரை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவைக் காட்டியும் அவரை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டதாக
 

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு அதன் வாரிசு தாரரான தீபக் வந்தபோது அவரை போலீசார் அனுமதிக்க மறுத்ததாக செய்தி வெளியானது. இதை போலீசார் மறுத்துள்ளனர்.


ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என்று சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் தீபக். இவர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு நேற்று பிற்பகல் வந்தார். அந்த வீட்டை தற்போது போலீசார் பாதுகாத்து வருகின்றனர். அவரை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவைக் காட்டியும் அவரை உள்ளே அனுமதிக்க போலீசார் மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் சிறிது நேரம் வெளியே நின்றுவிட்டு தீபக் புறப்பட்டுச் சென்றார் என செய்தி வெளியானது.


இந்த தகவலை சென்னை பெருநகர காவல்துறை மறுத்துள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில், “ஜெயலலிதாவின் இல்லம் சென்னை போலீசின் கட்டுப்பாட்டில் இல்லை. அது சென்னை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது. போலீஸ் தரப்பில் பாதுகாப்பு மட்டுமே வழங்கப்படுகிறது. தீபக் ஜெயலலிதாவின் வீட்டை ஒட்டி உள்ள பழைய ஜெஜெ டி.வி அலுவலக வாசல் வழியாக உள்ளே வந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர். 10 நிமிடம் உள்ளே இருந்துவிட்டு வெளியே வந்த தீபக், சிறிது நேரம் வெளியே நின்றுவிட்டு காரில் ஏறிச் சென்றார்” எனக் கூறியுள்ளனர்.


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர ஆணை பிறப்பித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன்கள் ஜெ.தீபா, ஜெ.தீபக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று அறிவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து போயஸ் கார்டன் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்துக்கும் இருவரும் உரிமை கோரி வருகின்றனர்.இந்த நிலையில் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு தீபக் வந்து சென்றது அ.தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.