×

“கொரோனாவை காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை”

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் கிண்டியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி கணேசன், “இதுவரை படித்து முடித்து 6,49,891லட்சம் வேலை வாய்ப்புக்காக பேர் பதிவு செய்துள்ளனர். படித்து முடித்து புதுப்பிக்காமல் உள்ளவர்கள் மீண்டும் புதுப்பித்து கொள்ளலாம் என்று முதல்வர் ஆணையை வழங்கியுள்ளார்.அதன்படி 2017 முதல் 2019 வரை புதுப்பிக்காதவர்கள் இந்த ஆண்டு புதுப்பித்துல்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் 5,25,438
 

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் கிண்டியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவி கணேசன், “இதுவரை படித்து முடித்து 6,49,891லட்சம் வேலை வாய்ப்புக்காக பேர் பதிவு செய்துள்ளனர். படித்து முடித்து புதுப்பிக்காமல் உள்ளவர்கள் மீண்டும் புதுப்பித்து கொள்ளலாம் என்று முதல்வர் ஆணையை வழங்கியுள்ளார்.அதன்படி 2017 முதல் 2019 வரை புதுப்பிக்காதவர்கள் இந்த ஆண்டு புதுப்பித்துல்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் 5,25,438 பேர் வேலைவாய்ப்பு வேண்டு பதிவு செய்து பலன் பெறுவார்கள். ஹோட்டல்கள் விடுதிகள் உள்ளிட்டவற்றில் குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம்தான் பணியாளர்கள் வேலை செய்ய வேண்டும். இதற்கான விதிகள் சட்டத்தில் உள்ளது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துபவர்கள் மீது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 50 ஆயிரம் அபராதம் கட்டும் நிலையும் ஏற்படும்.

தொழிற்சாலைகளில் இந்த ஊரடங்கு காலங்களின் காரணமாக ஆட்குறைப்பு செய்தால் கட்டாயம் அந்த குறிப்பிட்ட தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் இருந்து வேலை செய்வோர் கால அளவைத் தாண்டி பணி செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.