×

ஊரடங்கு தளர்வுகளினால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது : ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 4,480 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24லட்சத்து 84ஆயிரத்து 177ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் இன்று 102பேர் உயிரிழந்ததில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 721ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் ஊரடங்கு தளர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 5ம்
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 4,480 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24லட்சத்து 84ஆயிரத்து 177ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் இன்று 102பேர் உயிரிழந்ததில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 721ஆக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் ஊரடங்கு தளர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு, வரும் 5ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மதுரை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்பட 8 மாவட்டங்களில் கொரோனா சிறிய அளவில் அதிகரித்துள்ளது; தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு குறைந்தாலும், பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் கைவசம் 8,16,890 தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. இந்த தடுப்பூசிகளை 2 அல்லது 3 நாட்கள் போடலாம் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளினால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனத்துடன் தொற்று பரவல் தடுப்பு பணிகளை செயல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்த்தியுள்ளார்.