×

தமிழகத்தில் ஊரடங்கு முடிவுக்கு வருகிறதா? அரசு தந்த முக்கிய பரிந்துரை

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு கலெக்டர்கள் பரிந்துரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாத் தொற்று குறையவில்லை என்றாலும் கட்டுக்குள் உள்ளது. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் கொரோனாவைக் காட்டிலும் உயிர்வாழ தங்கள் தொழிலுக்குத் திரும்புவதில் ஆர்வமாக உள்ளன. இதனால் இ-பாஸ் உள்ளிட்டவற்றை நீக்கி தங்களை பழையபடி நடமாட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பது பெயரளவில் உள்ளது. இருக்கும் சிறிதளவு கட்டுப்பாட்டையும் நீக்கிவிட்டால் கட்டுக்குள் இருக்கும்
 


தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு கலெக்டர்கள் பரிந்துரை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.


தமிழகத்தில் கொரோனாத் தொற்று குறையவில்லை என்றாலும் கட்டுக்குள் உள்ளது. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் கொரோனாவைக் காட்டிலும் உயிர்வாழ தங்கள் தொழிலுக்குத் திரும்புவதில் ஆர்வமாக உள்ளன. இதனால் இ-பாஸ் உள்ளிட்டவற்றை நீக்கி தங்களை பழையபடி நடமாட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.


அதே நேரத்தில் தற்போது கொரோனா ஊரடங்கு என்பது பெயரளவில் உள்ளது. இருக்கும் சிறிதளவு கட்டுப்பாட்டையும் நீக்கிவிட்டால் கட்டுக்குள் இருக்கும் கொரோனா பரவல் வேகம் எடுத்துவிடும் என்று எச்சரிக்கின்றனர். இதனால் ஊரடங்கை நீக்க வேண்டாம் என்று தலைமைச் செயலாளரிடம் மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.


இதன் அடிப்படையில் தியேட்டர், மால், பள்ளிக்கூடம் தவிர்த்து மற்ற அனைத்தையும் திறப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பொது போக்குவரத்து பற்றி முடிவெடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் மெட்ரோ ரயிலை மட்டும் இயக்கலாமா என்றும் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக அரசுக்கு அதிகாரிகள் மட்டத்திலிருந்து பரிந்துரைகள் வந்துள்ளன.


வருகிற 29ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் இந்த பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது. அநேகமாக ஊரடங்கு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.