×

நீட் தேர்வு கெடுபிடிகள்: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு!

நீட் தேர்வின் போது கம்மல், தாலியை கழற்ற சொல்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இளங்கலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வாக நடத்தப்படும் நீட் தேர்வு, பல கடுமையான கட்டுப்பாடுகளுடனே நடத்தப்படுகிறது. தேர்வு அறையில் ஹேர்பின், நகைகள், கொலுசு உள்ளிட்ட எதையும் அனுமதிக்க மறுக்கும் அதிகாரிகள், அனைத்தையும் கழற்றிய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கின்றனர். எல்லா மாநிலங்களிலும் இதே நடைமுறை தான் தொடருகிறது. அந்த வகையில், கடந்த செப்.13ம் தேதி
 

நீட் தேர்வின் போது கம்மல், தாலியை கழற்ற சொல்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வாக நடத்தப்படும் நீட் தேர்வு, பல கடுமையான கட்டுப்பாடுகளுடனே நடத்தப்படுகிறது. தேர்வு அறையில் ஹேர்பின், நகைகள், கொலுசு உள்ளிட்ட எதையும் அனுமதிக்க மறுக்கும் அதிகாரிகள், அனைத்தையும் கழற்றிய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கின்றனர். எல்லா மாநிலங்களிலும் இதே நடைமுறை தான் தொடருகிறது.

அந்த வகையில், கடந்த செப்.13ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொள்ள சென்ற தென்காசி மாணவியை, தாலிச் செயின், மெட்டி, பூ உள்ளிட்டவற்றை கழற்றச் சொன்ன சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த மாணவி தாலிச் செயின் உள்ளிட்டவற்றை கழற்றிய பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு மற்றும் தேர்வு முகமை 4 வாரங்களில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.