×

சிவசங்கர் பாபா ஜாமீன் மனு; சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு!

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீதான ஜாமீன் மனு மீது பதிலளிக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் மூன்று போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கடந்த ஜூன் 16ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன்
 

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா மீதான ஜாமீன் மனு மீது பதிலளிக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தை அடுத்த சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் மூன்று போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா மீது சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கடந்த ஜூன் 16ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி அவர் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தள்ளுபடியானது.

இந்த நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா மனு தாக்கல் செய்தார். சுஷில் ஹரி பள்ளிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அறக்கட்டளை மட்டுமே நடத்தி வருகிறேன். ஆன்மீக சொற்பொழிவுக்காக அந்த பள்ளிக்கு சென்று வந்தேன். நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதயம் தொடர்பான பிரச்னைகள் இருப்பதால் தலைமறைவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்மீக பயணத்துக்காக டெல்லி சென்றபோது தான் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். எனவே ஜாமீன் தரவேண்டும் என கோரினார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிவசங்கர் பாபா ஜாமீன் மீது சிபிசிஐடி போலீசார் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.