×

நீட் தேர்வு முடிவுக்கு தடைக்கோரி வழக்கு: ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவு

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைகோரிய வழக்கில் ஆளுநரின் செயலர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கடந்த செப்.13ம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வின் முடிவுகள், வரும் 16ம் தேதி வெளியாகும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்தது. தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், அதன் முடிவுகளும் 16ம் தேதியே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கான 7.5% இட
 

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடைகோரிய வழக்கில் ஆளுநரின் செயலர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கடந்த செப்.13ம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வின் முடிவுகள், வரும் 16ம் தேதி வெளியாகும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிவித்தது. தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில், அதன் முடிவுகளும் 16ம் தேதியே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மருத்துவ படிப்பில் அரசு மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் வரை முடிவுகளை வெளியிட தடைக்கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்து சட்டம் எப்போது இயற்றப்பட்டது? என கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக ஆளுநரின் செயலர் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.