×

ஏ.ஆர்.ரகுமானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இசை நிகழ்ச்சி தோல்வி அடைந்துவிட்டதால் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 2000ம் ஆண்டு சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை வைத்து துபாயில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். எதிர்பார்த்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவில்லை. இதனால் ஏ.ஆர் ரகுமான் 3 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்திருந்த
 

இசை நிகழ்ச்சி தோல்வி அடைந்துவிட்டதால் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 2000ம் ஆண்டு சென்னையை சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை வைத்து துபாயில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். எதிர்பார்த்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி வெற்றி பெறவில்லை. இதனால் ஏ.ஆர் ரகுமான் 3 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அவர் அளித்திருந்த மனுவில், இசை நிகழ்ச்சியால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் நிகழ்ச்சியின் காப்புரிமையை வேறு ஒருவருக்கு விற்று ஏ.ஆர் ரகுமான் பணம் சம்பாதிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஏ.ஆர் ரகுமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் நிகழ்ச்சிக்காக பேசிய தொகையை கூட தரவில்லை. போலியாக இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் என வாதிட்டார். அப்போது நஷ்ட ஈடு பிரச்னை முடிந்து விட்டதா என்பதை நீதிமன்றத்திடம் தெரிவிக்குமாறு ஏ.ஆர் ரகுமான் தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது பிரச்சினையில் எந்த சமரசமும் ஏற்படவில்லை என ஏ.ஆர் ரகுமான் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை தொடர்ந்த காளியப்பன் தரப்பிலிருந்து எந்த வாதமும் முன்வைக்கப்படவில்லை. அவர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என காளியப்பன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதைக் கேட்டுக் கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.