×

திருவள்ளூரில் 5000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5000க் கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சென்னையில் கடும் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனாத் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தினமும் கண்டறியப்படும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்
 

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5000க் கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சென்னையில் கடும் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனாத் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஆனால், சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தினமும் கண்டறியப்படும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 5,000ஐ கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4988 பேருக்கு கொரோனா இருந்தது. நேற்று 217 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. இதனால் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 5,205 ஆக அதிகரித்தது. இதில் 3356 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6942 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 3954 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் போல மற்ற மாவட்டங்களிலும் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.