×

மாவட்ட ஆட்சியர் மூலம் எம்எல்ஏவுக்கு பரவிய கொரோனா!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் நாளில் ஊரடங்கை முழுமையாக பின்பற்றிய மக்கள், அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிய ஆரம்பித்துவிட்டனர். அத்தியாவசிய கடைகள் அனைத்தும் பிற்பகல் 12 மணி வரை திறந்திருந்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து, கட்டுப்பாடுகளை கடுமையாக்கி அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் விளைவாக, தற்போது பாதிப்புகள் சுற்று குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசியல் தலைவர்கள்,
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் நாளில் ஊரடங்கை முழுமையாக பின்பற்றிய மக்கள், அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிய ஆரம்பித்துவிட்டனர். அத்தியாவசிய கடைகள் அனைத்தும் பிற்பகல் 12 மணி வரை திறந்திருந்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து, கட்டுப்பாடுகளை கடுமையாக்கி அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் விளைவாக, தற்போது பாதிப்புகள் சுற்று குறைந்திருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் பாரபட்சமின்றி கொரோனா பரவியது. கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்த நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த வாரம் ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்ட அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமாருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.