×

தேனி மாவட்டத்தின் கிராம புறங்களில் பரவும் கொரோனா.. பீதியில் மக்கள்!

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 164 ஐ கடந்துள்ள நிலையில், இன்னும் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் முக்கிய காரணம், சில முக்கிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என்றும் அவர்கள் மூலமாக அவர்களது குடும்பத்தினருக்கும் பரவி வருகிறது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை தேனியின் நகர் பகுதிகளிலேயே கொரோனா பரவி வந்த நிலையில், தற்போது கிராமப் பகுதிகளிலும் பரவத் தொடங்கி விட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
 

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 164 ஐ கடந்துள்ள நிலையில், இன்னும் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் முக்கிய காரணம், சில முக்கிய நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் என்றும் அவர்கள் மூலமாக அவர்களது குடும்பத்தினருக்கும் பரவி வருகிறது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை தேனியின் நகர் பகுதிகளிலேயே கொரோனா பரவி வந்த நிலையில், தற்போது கிராமப் பகுதிகளிலும் பரவத் தொடங்கி விட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். இதனிடையே ஒரு உணவக பணியாளருக்கு கொரோனா இருப்பதாகவும் அந்த உணவகத்தில் சாப்பிட்ட எல்லாரும் பரிசோதனைக்கு வர வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கருத்து மக்களின் பீதியை இன்னும் அதிகரித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகள் மூலமாகவும் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதால், மக்கள் அதனை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். இதனால் எல்லா இடங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.