×

சென்னை அதிக மக்கள் வாழும் இடம் என்பதால் கொரோனா அதிகமாக பரவுகிறது – முதல்வர்

சேலத்தில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டதால் அதனை கட்டுப்படுத்த ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க கடந்த 2016 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் வழங்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அந்த பாலம் 7.8 கி.மீ தூரத்தில் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாகியுள்ள அந்த பாலத்தின் கட்டுமானப்பணி நிறைவடைந்த நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி அதனை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அதன்
 

சேலத்தில் கடுமையான போக்குவரத்து ஏற்பட்டதால் அதனை கட்டுப்படுத்த ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க கடந்த 2016 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் வழங்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அந்த பாலம் 7.8 கி.மீ தூரத்தில் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாகியுள்ள அந்த பாலத்தின் கட்டுமானப்பணி நிறைவடைந்த நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி அதனை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைப்பதாக வெளியாகும் தவறு. அரசு எந்த இழப்புகளையும் மறைக்கவில்லை. தினமும் உண்மையான தகவல்கள் தான் வெளியிடப்பட்டு வருவதாக தெரிவித்தார், தொடர்ந்து, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயிரிழப்பு குறைவாக இருப்பதாக கூறிய அவர், சென்னையில் அதிக மக்கள் தொகை இருப்பதால் கொரோனா எளிதில் பரவுகிறது என்றும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.