×

வேல் யாத்திரையால் கொரோனா பரவல்: 135 பேர் மீது வழக்குப்பதிவு!

கடந்த மாதம் நவ.6ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு வேல் யாத்திரைக்கு தடை விதித்திருந்தும், அதனை மீறி வேல் யாத்திரை தொடங்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டதால் அவர்களை கைது செய்து யாத்திரையை போலீசார் தடுத்தனர். தடை விதித்தாலும் யாத்திரையை தொடங்குவோம் என எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதன் படியே, தடையை மீறி பல இடங்களில் யாத்திரை நடத்த முயன்ற எல்.முருகன் உள்ளிட்டோர் மீது
 

கடந்த மாதம் நவ.6ம் தேதி பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை தொடங்கப்பட்டது. கொரோனாவை காரணம் காட்டி தமிழக அரசு வேல் யாத்திரைக்கு தடை விதித்திருந்தும், அதனை மீறி வேல் யாத்திரை தொடங்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டதால் அவர்களை கைது செய்து யாத்திரையை போலீசார் தடுத்தனர். தடை விதித்தாலும் யாத்திரையை தொடங்குவோம் என எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

அதன் படியே, தடையை மீறி பல இடங்களில் யாத்திரை நடத்த முயன்ற எல்.முருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த நவ.6ம் தேதி நடந்த வேல் யாத்திரை நிறைவு விழாவில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு யாத்திரையை முடித்து வைத்தார். அறிவித்திருந்ததன் படியே, வெற்றிகரமாக யாத்திரையை முடித்து விட்டதாக எல்.முருகன் கூறினார்.

இந்த நிலையில், வேல் யாத்திரையால் கொரோனா பரவல் ஏற்பட்டதாக பாஜகவினர் 135 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக டிஜிபி தரப்பில் கூடுதல் ஐஜி பாஸ்கரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.