×

கொரோனா விதிமீறல்: சென்னையில் ஒரே நாளில் ரூ. 1 லட்சத்து 13 ஆயிரம் அபராதம் வசூல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 2,079பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 35 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 29பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு இன்று முதல் வருகிற
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 2,079பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 35 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 29பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு இன்று முதல் வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மக்கள் பொதுஇடங்களில் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி பொது இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் கொரோனா விதிமீறலை கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் கூடும் இடங்களில் சிறப்புக்குழு நடத்திய சோதனையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 54 திருமண மண்டபங்களுக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்ட நபர்களிடம் ஒரேநாளில் ரூ.1,13,300 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது