×

கேட்பாரற்று கிடந்த கொரோனா நோயாளி சடலம்.. அரசு மருத்துவமனையில் அவலம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில படுக்கைகள் நிரம்பி வழிகிறது. சிகிச்சைக்கு இடமில்லாமல் நோயாளிகள் வராண்டாவில் சிகிச்சை பெறும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிலையில், பரமக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவரின் சடலம் கேட்பாரற்று கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 250 பேருக்கு கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திருவாடானை பகுதியை சேர்ந்த
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில படுக்கைகள் நிரம்பி வழிகிறது. சிகிச்சைக்கு இடமில்லாமல் நோயாளிகள் வராண்டாவில் சிகிச்சை பெறும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்த நிலையில், பரமக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவரின் சடலம் கேட்பாரற்று கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 250 பேருக்கு கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திருவாடானை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற ஆசிரியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு பாதிப்பு அதிகமானதை அடுத்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை முழுவதுமாக கவர் செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல் முழுமையாக பேக்கிங் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உள்நோயாளிகள் பிரிவு நுழைவு வாயிலில் அவரது சடலம் சில மணி நேரமாக அங்கேயே கடந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் கொடுத்த பிறகு சடலம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.