×

கொரோனா விதிமீறல் அபராதத்தை எதிர்த்து வழக்கு

கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என அரசு அரசாணை வெளியிட்டதன் பேரில், சென்னையின் பல இடங்களில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மக்கள் விழுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே, அபராதம் வசூலிக்கப்படுவதாக
 

கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என அரசு அரசாணை வெளியிட்டதன் பேரில், சென்னையின் பல இடங்களில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மக்கள் விழுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே, அபராதம் வசூலிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

இந்த நிலையில், அபராதம் விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை மீறும் தனி நபர், நிறுவனங்களுக்கு ரூ. 200 முதல் ரூ.5,000 வரை அபராதம் வசூலிக்கும் அரசின் நடவடிக்கையை எதிர்ப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.