×

ரூ.2000&மளிகைப் பொருட்கள்! ஊரடங்கை மறந்து உற்சாகத்தில் தமிழக மக்கள்

கொரோனா நிவாரண தொகை 2ம் தவணையாக ரூ.2ஆயிரம் மற்றும் 14வகையான மளிகை தொகுப்பு பெற்று கொண்ட மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மூதாட்டி ஒருவர் வாயார சிரிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த புகைப்படத்தை புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அளிக்கப்படும் என்று முதல் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதன்படி, முதற்கட்டமாக 2000 ரூபாய் ஏற்கனவே
 

கொரோனா நிவாரண தொகை 2ம் தவணையாக ரூ.2ஆயிரம் மற்றும் 14வகையான மளிகை தொகுப்பு பெற்று கொண்ட மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மூதாட்டி ஒருவர் வாயார சிரிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த புகைப்படத்தை புகைப்பட கலைஞர் ஜாக்சன் ஹெர்பி எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு அளிக்கப்படும் என்று முதல் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதன்படி, முதற்கட்டமாக 2000 ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், இன்று முதல் மீதமுள்ள 2000 ரூபாய் மற்றும் சர்க்கரை, கோதுமை, உப்பு, ரவை, உளுத்தம் பருப்பு, புளி, கடலை பருப்பு, டீ தூள், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், குளியல் சோப்பு, துணி சோப்பு ஆகிய 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது. இதற்கான டோக்கன் கடந்த வாரம் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.

இதனிடையே டோக்கன் பெறாதவர்கள், வெளியூர் சென்றவர்கள் இம்மாத இறுதி வரை நிவாரண பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.