×

கொரோனாவால் இறந்த நபர்… 4 நாட்களாக உடலை தேடும் குடும்பத்தினர்!

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அவரது குடும்பத்தினர் கடந்த 4 நாட்களாக தேடி வரும் சம்பவம் தஞ்சையில் நிகழ்ந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். 55 வயதான பாலகிருஷ்ணனுக்கு சங்கீதா என்ற மனைவியும் , லோகேஷ், ஹரிப்பிரியா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி
 

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அவரது குடும்பத்தினர் கடந்த 4 நாட்களாக தேடி வரும் சம்பவம் தஞ்சையில் நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். 55 வயதான பாலகிருஷ்ணனுக்கு சங்கீதா என்ற மனைவியும் , லோகேஷ், ஹரிப்பிரியா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பதப்படுத்தப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலகிருஷ்ணனின் உடலை சொந்த ஊருக்கு அமரர் ஊர்தி மூலம் எடுத்துச் செல்ல முடிவெடுத்த அவரது குடும்பத்தினர் அவரது என் முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டுமென்று துணியை அகற்றி உள்ளனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. காரணம் அங்கு பாலகிருஷ்ணன் உடலுக்கு பதிலாக 60 வயது மதிக்கத்தக்க வேறு ஒருவரின் கொடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு தகவல் அழிக்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் இதை பெரிது படுத்த வேண்டாம் என்று கூறி மன்னிப்பு கேட்டுள்ளனர். இருப்பினும் பாலகிருஷ்ணன் உடலுக்கு பதிலாக கொடுக்கப்பட்ட உடலை மருத்துவ கல்லூரியில் ஒப்படைத்த அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு தருமாறு கேட்டுள்ளனர். இருப்பினும் பாலகிருஷ்ணன் இறந்து 4 நாட்களாக ஆகியும் அவர் உடல் குறித்து எந்த தகவலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால் பாலகிருஷ்ணன் மனைவி மற்றும் குழந்தைகள் அவரின் உடலை கண்ணீருடன் தேடி வருகின்றனர்.