×

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் அரசும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. தற்போது புறநகர் ரயில் சேவை, பள்ளி கல்லூரிகள், தியேட்டர் உள்ளிட்டவை திறக்க மட்டுமே தடை தொடருகிறது. இதனிடையே அதிமுக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் என பலருக்கும் கொரோனா
 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் அரசும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. தற்போது புறநகர் ரயில் சேவை, பள்ளி கல்லூரிகள், தியேட்டர் உள்ளிட்டவை திறக்க மட்டுமே தடை தொடருகிறது. இதனிடையே அதிமுக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் என பலருக்கும் கொரோனா பாதிப்பு பரவியதால், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு லேசான அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் உடல் நலம் சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.