×

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதியானது!

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. ஆனால், அவர்களுக்கு முறையான பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்று குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, மனநல காப்பக சமையல்காரர், காப்பகத்தின் இயக்குநர், மூன்று முதுநிலை மருத்துவ மாணவர்கள், 2 காப்பாளர்கள்,
 

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதியானது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. ஆனால், அவர்களுக்கு முறையான பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்று குற்றம்சாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, மனநல காப்பக சமையல்காரர், காப்பகத்தின் இயக்குநர்,

மூன்று முதுநிலை மருத்துவ மாணவர்கள், 2 காப்பாளர்கள், 26 நோயாளிகளுக்கு கொரோனா பரவியது. மனநல நோயாளிகளுக்கு தங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது பற்றித் தெரிவிக்க முடியாது. எனவே, அங்கு உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இதை ஏற்ற நீதிமன்றம் அனைவருக்கும் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் 1100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதற்கட்ட பரிசோதனையில் 12 பேருக்கும், இரண்டாம் கட்ட பரிசோதனையில் 13 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. தற்போது வரை அங்கு மொத்தம் 39 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதில் 22 பேர் குணமடைந்துவிட்டனர் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.