×

அண்ணாமலையாரின் கோவில் கருவறையை வீடியோ எடுத்த நபர்கள் மீது புகார்!

திருவண்ணாமலை கோவில் கருவறையை செல்போனில் வீடியோ நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 29 ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. 2668 ஆதி உயரம் கொண்ட இந்த மலையில் ஓம் நமசிவாய கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வு பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது எனலாம். இருப்பினும் இந்த நிகழ்ச்சியின் போது மலையின் மீது ஏறவும், கிரிவலம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது. முடிந்தளவு பக்தர்கள் கோயிலில் நின்றவாறு ஜோதி வடிவில் தெரிந்த இறைவனை
 

திருவண்ணாமலை கோவில் கருவறையை செல்போனில் வீடியோ நபர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 29 ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டது. 2668 ஆதி உயரம் கொண்ட இந்த மலையில் ஓம் நமசிவாய கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வு பக்தர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியது எனலாம். இருப்பினும் இந்த நிகழ்ச்சியின் போது மலையின் மீது ஏறவும், கிரிவலம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டது. முடிந்தளவு பக்தர்கள் கோயிலில் நின்றவாறு ஜோதி வடிவில் தெரிந்த இறைவனை வணங்கினர். பின்னர் கோயிலில் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் கருவறையை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபர்கள் மீது சைபர் கிரைமில் கோயில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.ஆகமவிதிகளின் படி கோயில் கருவறையை படம் பிடிக்க முடியாது என்பதால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பழனி கோயில் கருவறையை படம் பிடித்ததாக பாஜகவினர் மீது கோயில் நிர்வாகம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.