×

மிதக்கும் கடலூர்-நேரில் ஆய்வு செய்ய விரைகிறார் முதலமைச்சர் பழனிசாமி!

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் கடலூருக்கு செல்ல உள்ளார். நேற்றிரவு தமிழகத்தைத் தாக்கிய நிவர் புயல், கடும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளத. கடலூர், புதுச்சேரி மற்றும் வட தமிழக பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து ,மின்சாரம் முழுமையாக தடைபட்டுள்ளது. கிராமங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மக்கள் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில்
 

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் கடலூருக்கு செல்ல உள்ளார்.

நேற்றிரவு தமிழகத்தைத் தாக்கிய நிவர் புயல், கடும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளத. கடலூர், புதுச்சேரி மற்றும் வட தமிழக பகுதிகளில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து ,மின்சாரம் முழுமையாக தடைபட்டுள்ளது.

கிராமங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மக்கள் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழக அரசும், பேரிடர் மேலாண்மை துறையும் மிகத் தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் புயல் பாதிப்பு நிலவரங்களை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 2 .30 மணி அளவில் கடலூர் செல்ல உள்ளார். நேற்று முதல் புயல் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் நேரடியாக கவனம் செலுத்தி மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.