×

‘ரூ.451 கோடி முதலீட்டில்’ உற்பத்தி திட்டங்கள் தொடக்கம்..1150 பேருக்கு வேலைவாய்ப்பு; முதல்வர் பழனிசாமி ட்வீட்

கடந்த 23 ஆம் தேதி தமிழகத்தில் முதலீடு செய்யும் விதமாக 16 நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அந்த 16 நிறுவனங்களில் ரூ.5.137 கோடி முதலீட்டால் தமிழகத்தில் 8,555 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல் கடந்த 20 ஆம் தேதி தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதனைத்தொடர்ந்து இன்று காலை ரூ.2,368 கோடி மதிப்பிலான 8 புதிய நிறுவனங்களின் திட்டங்களுக்கு
 

கடந்த 23 ஆம் தேதி தமிழகத்தில் முதலீடு செய்யும் விதமாக 16 நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அந்த 16 நிறுவனங்களில் ரூ.5.137 கோடி முதலீட்டால் தமிழகத்தில் 8,555 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல் கடந்த 20 ஆம் தேதி தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதனைத்தொடர்ந்து இன்று காலை ரூ.2,368 கோடி மதிப்பிலான 8 புதிய நிறுவனங்களின் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அந்த 8 புதிய திட்டங்கள் மூலம் 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் திருச்செங்கோட்டில் துவக்கி வைக்கப்பட்டுள்ள உற்பத்தி திட்டங்கள் மூலமாக 1150 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “Mothi Spinners, Lucky Yarn Tex மற்றும் Lucky Weavess நிறுவனம் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் ரூ.451 கோடி முதலீட்டில் மேற்கொள்ளவுள்ள நூல்கள் மற்றும் ஆடைகள் உற்பத்தி திட்டங்களை துவக்கி வைத்தேன். இதன் மூலம் 1150 நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.