×

அமைச்சர் ஓ.எஸ் மணியனின் மனைவி மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்!

அமைச்சர் ஓஎஸ் மணியனின் மனைவி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தை சேர்ந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி பெயர் கலைச்செல்வி. அவருக்கு பாரதி, வாசுகி ஆகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அமைச்சரின் மனைவி கலைச்செல்வி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலை நெஞ்சுவலியால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட
 

அமைச்சர் ஓஎஸ் மணியனின் மனைவி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தை சேர்ந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி பெயர் கலைச்செல்வி. அவருக்கு பாரதி, வாசுகி ஆகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அமைச்சரின் மனைவி கலைச்செல்வி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலை நெஞ்சுவலியால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் பழனிசாமியும் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நாகை மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான
ஓ.எஸ் மணியன் அவர்களின் மனைவி திருமதி.கலைச்செல்வி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையுற்றேன். துணைவியாரை இழந்துவாடும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.