×

வரதமாநதி அணையில் இருந்து முதல்வர் நீர் திறக்க உத்தரவு!

நவ.6ம் தேதி முதல் வரதமாநதி அணையில் அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்னரே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல நீர் நிலைகள் நிரம்பியிருக்கும் நிலையில், பாசனத்திற்காக பல அணைகளில் இருந்து முதல்வர் உத்தரவின் பேர் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
 

நவ.6ம் தேதி முதல் வரதமாநதி அணையில் அணையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்னரே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல நீர் நிலைகள் நிரம்பியிருக்கும் நிலையில், பாசனத்திற்காக பல அணைகளில் இருந்து முதல்வர் உத்தரவின் பேர் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நவ.6ம் தேதி முதல் வரதமாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்குமாறு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 5.523 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.