×

செப்டம்பர் 8 ஆம் தேதி மருத்துவக் குழுவுடன் மீண்டும் முதல்வர் ஆலோசனை!

தளர்வுகளால் கொரோனா பரவல் அதிகரிப்பதால் செப்.8 ஆம் தேதி முதல்வர் மீண்டும் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 5 மாதங்களாக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக அங்கு பணிபுரிந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானது. இதனையடுத்து கடந்த 30 ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துகள், மால்கள், பூங்காக்கள் இயங்கலாம் என அரசு அறிவித்தது. அதன் படி கடந்த 1 ஆம் தேதி முதல்
 

தளர்வுகளால் கொரோனா பரவல் அதிகரிப்பதால் செப்.8 ஆம் தேதி முதல்வர் மீண்டும் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 5 மாதங்களாக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக அங்கு பணிபுரிந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானது. இதனையடுத்து கடந்த 30 ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துகள், மால்கள், பூங்காக்கள் இயங்கலாம் என அரசு அறிவித்தது. அதன் படி கடந்த 1 ஆம் தேதி முதல் அரசு அனுமதி அளித்த அனைத்தும் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.

இதனால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடக்கி இருப்பதால், கொரோனா பாதிப்பு வழக்கத்தை விட அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட சேவைகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து இடங்களிலும் பின்பற்றி வரும் நிலையிலும் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி மீண்டும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது தளர்வுகள் அறிவித்திருப்பதற்கு ஏற்ப மருத்துவ வசதிகளை அதிகரிப்பது குறித்தும் தளர்வுகளால் கொரோனா அதிகரித்ததால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.