×

சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து சென்னையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் என சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு வரும்
 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து சென்னையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நாளை முதல் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் என சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு வரும் முன் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படவேண்டும் என்றும் பயணிகள் மாஸ்க் அணிய வேண்டும்; பேருந்து நிறுத்தங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பல மாதங்களாக பயன்பாடு இல்லாமல் இருந்த பணிமனைகளும், பேருந்துகளும் மீண்டும் மாவட்டத்திற்குள் பயணிக்க தயாராகி வருகின்றன.