×

ஊரடங்கு காரணமாக சிவகங்கையில் குவிந்த குடிமக்கள்! – நான்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட கலெக்டர்

மதுரையில் ஊரடங்கு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு குடிமகன்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் நான்கு டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் கடந்த 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுரை குடி மகன்கள் திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு
 

மதுரையில் ஊரடங்கு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு குடிமகன்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் நான்கு டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் கடந்த 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுரை குடி மகன்கள் திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மதுரையில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாஸ்க் உள்ளிட்ட எந்த பாதுகாப்பு கவசமும் இன்றி, சமூக இடைவெளியை மதிக்காமல் டாஸ்மாக் கடைகளில் கூட்டமாக நிற்பதால் சிவகங்கை மாவட்டத்திலும் நோய்த்தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரை – சிவகங்கை எல்லையில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மதுரை மாவட்டத்திலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்குள் வரும் நபர்களை உரிய அனுமதி இருந்தால் மட்டுமே அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், மது பாட்டில் கிடைக்காமல் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர்.