×

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்… பொதுமுடக்கம் தொடர்பாக ஆலோசனை!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,989 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 30,444 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்த பாடில்லை மாறாக பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் சென்னையில் கொரோனா சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து
 

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 1,989 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,687 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 30,444 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்று குறைந்த பாடில்லை மாறாக பாதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் சென்னையில் கொரோனா சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொதுமுடக்கம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது. இதையடுத்தே தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த விவரங்கள் தெரியவரும்.