×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ஆயிரத்து 40 கிலோமீட்டர் கிழக்கு திசையில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தொடர்ந்து வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும்
 

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது இன்று காலை தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ஆயிரத்து 40 கிலோமீட்டர் கிழக்கு திசையில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தொடர்ந்து வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் டிசம்பர் 2 ஆம் தேதி இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரவுள்ளது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்வுள்ளார். மேலும் தென் மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்