×

ஆழியாறு அணையில் இருந்து பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

கோவை ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பாசன பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுக்கை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கை வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் நவம்பர் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை 1,137 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க முதல்வர்
 

கோவை ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பாசன பகுதிகளுக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுக்கை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கை வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் நவம்பர் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை 1,137 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திறப்பின் மூலம் ஆனைமலை வட்டத்தில் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதேபோல் திண்டுக்கல் வரதமாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக நவம்பர் ஆறாம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 120 நாட்கள் தண்ணீர் திறப்பதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 5,523 .16 ஏக்கர் பாசன வசதி பெறும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக பாசன வசதிக்காக நீர்நிலைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.