×

ஆட்சியர்களுடன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தினசரி பாதிப்பு தமிழகத்தில் உச்சம் பெற்று வரும் நிலையில், நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தநிலையில், நாளை தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அத்துடன் அடுத்த இரு வாரங்களுக்கு கொரோனா பரவல் உச்சத்தை தொடும் என்பதால் தளர்வுக்கற்ற ஊரடங்கை தமிழக அரசு
 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா தினசரி பாதிப்பு தமிழகத்தில் உச்சம் பெற்று வரும் நிலையில், நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தநிலையில், நாளை தளர்வுகளுடன் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. அத்துடன் அடுத்த இரு வாரங்களுக்கு கொரோனா பரவல் உச்சத்தை தொடும் என்பதால் தளர்வுக்கற்ற ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் நாளைமுதல் காய்கறி, இறைச்சி, மளிகை என எந்த கடையும் இருக்காது என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை அனைத்து கடைகளும் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகள் அற்ற ஊரடங்கை நாளை முதல் அமல் படுத்துவது பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். காணொலி மூலமாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அத்துடன் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.