×

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 12,772பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23லட்சத்து 66 ஆயிரத்து 493ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 254 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,801ஆக அதிகரித்துள்ளது.இதனால் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற
 

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 12,772பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23லட்சத்து 66 ஆயிரத்து 493ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 254 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,801ஆக அதிகரித்துள்ளது.இதனால் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட நிலையில் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து 22 மாவட்ட ஆட்சியர்களுடன் காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் கொரோனா தடுப்பு பணிகள் என்ன? கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசிக்கவுள்ளார்.