×

தமிழகத்தில் 22 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

கடந்த 20 ஆம் தேதி தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தாகியது. அதனைத்தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி தமிழகத்தில் முதலீடு செய்யும் விதமாக 16 நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அந்த 16 நிறுவனங்களில் ரூ.5.137 கோடி முதலீட்டால் தமிழகத்தில் 8,555 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரூ.2,368
 

கடந்த 20 ஆம் தேதி தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கையெழுத்தாகியது. அதனைத்தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி தமிழகத்தில் முதலீடு செய்யும் விதமாக 16 நிறுவனங்களுடன் தமிழக முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அந்த 16 நிறுவனங்களில் ரூ.5.137 கோடி முதலீட்டால் தமிழகத்தில் 8,555 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ரூ.2,368 கோடி மதிப்பிலான 8 புதிய நிறுவனங்களின் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அந்த 8 புதிய நிறுவன திட்டங்கள் மூலம் 24,870 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ரூ.260.90 கோடி மதிப்பிலான 22 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். கடலூர் மாவட்டம், கண்டரக்கோட்டையில் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.