×

67 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி! – அமைச்சர் உதயகுமார் பேட்டி

தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 67,200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் கப்பலூர் வேளாண்மை வாணிபக் கழகத்தில் உள்ள நெல்கொள்முதல் கிடங்குகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த ஆண்டு 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 28 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
 


தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 67,200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.


மதுரையில் கப்பலூர் வேளாண்மை வாணிபக் கழகத்தில் உள்ள நெல்கொள்முதல் கிடங்குகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த ஆண்டு 23 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 28 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் வருவதால் முதலமைச்சர் உத்தரவு படி ஆய்வுப் பணி மேற்கொண்டேன்.
கொரோனா காலத்திலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வண்ணம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 41 புதிய தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 30,500 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 67,200 புதிய வேலை வாய்ப்புகளை முதல்வர் உருவாக்கியுள்ளார்.


கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் புதிய முதலீடுகளை ஈர்த்து இந்தியாவில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் தமிழகம் முதன்மையாக உள்ளது. நாங்கள் அறிவித்த திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 43 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதன் மூலம் தமிழகத்தில் தான் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்திய அளவில் ஜி.டி.பி 4 சதவிகிதமாக உள்ள நிலையில் தமிழகத்தில் எட்டு சதவிகிதமாக உயர்ந்துள்ளது.


வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது என்ற எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்துக்கு இந்த தகவலை வெளியிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். கடந்த பிப்ரவரியில் 8.3 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் தற்போது 2.6 சதவிகிதமாக குறைந்துள்ளது. இன்னும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்” என்றார்.