×

‘சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்’ – முக்கியத் தகவல் இதோ!

நாளை ஒருநாள் சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ” கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகம் செல்வோருக்கும், பெண்களுக்கும் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று
 

நாளை ஒருநாள் சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ” கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை சென்ட்ரல், கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அலுவலகம் செல்வோருக்கும், பெண்களுக்கும் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் எல்லாரும் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது, ’NON PEAK HOURS’ நேரமான காலை 7 முதல் 9.30 மற்றும் மாலை 4.30 முதல் இரவு 7 வரை தவிர்த்து பிற நேரங்களில் அனைவரும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மக்கள் முறையாக கடைபிடிக்கும் பொருட்டு, ஒரு வழி டிக்கெட் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதிக ரயில்களை இயக்க, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.