×

முழு ஊரடங்கு உத்தரவை மீறிய 56,583 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,713 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 23பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் முழு
 

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,713 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் 68 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 23பேர் தனியார் மருத்துவமனையிலும், 45 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,025ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறிய 56,583 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளி பின்பற்றாதவர்கள் என 22, 723 வழக்குகளும், தேவையில்லாமல் சுற்றிய 49,848 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.