×

சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு…!!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பொதுமுடக்கம் 5 ஆம் கட்டமாக நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் 50% பேர் 2 நாளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணிக்கு திரும்ப போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகளை
 

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பொதுமுடக்கம் 5 ஆம் கட்டமாக நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் 50% பேர் 2 நாளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணிக்கு திரும்ப போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகளை இயக்கும்போது சிரமம் ஏற்படாத வகையில் 1,775 பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு சான்றிதழ் வாங்க வேண்டியுள்ளதால் பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பணிக்கு வரும் பணியாளர்கள் முகக்கவசம், கை உறை அணிய வேண்டும் என்றும் பணியாளர்கள் கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவ வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் விரைவில் சென்னையில் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என தெரிகிறது.