×

‘சென்னையில் அதிகளவில் தற்கொலை’.. 2ஆவது இடத்தில் தமிழகம்; ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த ஆண்டில் சென்னையில் தான் அதிக அளவில் தற்கொலை நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கொலை, கொள்ளை, தற்கொலை என அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக கொலைகளும், தற்கொலைகளும் அதிகமாக நடக்கிறது என்றே கூறலாம். பாடம் புரியவில்லை, தேர்வில் தோல்வி என மாணவர்களும், குடும்ப பிரச்னையில் கணவன் மனைவிகளும், மன அழுத்தத்தால் இளைஞர்களும் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது. தற்போது கூட ஆன்லைன்
 

கடந்த ஆண்டில் சென்னையில் தான் அதிக அளவில் தற்கொலை நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கொலை, கொள்ளை, தற்கொலை என அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக கொலைகளும், தற்கொலைகளும் அதிகமாக நடக்கிறது என்றே கூறலாம். பாடம் புரியவில்லை, தேர்வில் தோல்வி என மாணவர்களும், குடும்ப பிரச்னையில் கணவன் மனைவிகளும், மன அழுத்தத்தால் இளைஞர்களும் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது. தற்போது கூட ஆன்லைன் பாடம் புரியாததால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரச்னைக்கு முடிவு தேடுவதற்கு பதிலாக, தனது வாழக்கையையே முடித்து கொள்ள நினைக்கும் நபர்களுக்கு உதவி புரிய பல ஹெல்ப் லைன் எண்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனாலும் சிலர் வாழ்வின் முக்கியத்துவத்தை உணராததால் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில், நாடு முழுவதிலும் தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் தமிழகம் 2ஆவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிவித்துள்ளது. தற்கொலைகள் அதிகமாக செய்து கொள்ளும் நகரங்களின் பட்டியலில் கடந்த ஆண்டு 2,461 தற்கொலையுடன் சென்னை முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு சென்னையில் 2102 பேர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து கடந்த ஆண்டு 2,461 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே போல டெல்லியில் 2,423 பேரும் பெங்களூரில் 2,081 பேரும் மும்பையில் 1,229 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காதல் பிரச்னை, குடும்பத் தகராறு உள்ளிட்ட காரணங்களால் தான் அதிகளவு தற்கொலை நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது.