×

மெத்தனப் போக்கு… மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

சென்னை நெற்குன்றம் பகுதியில் விதிகளை மீறி ரூபஸ், ஆல்பர்ட் ஆகியோர் கட்டிடம் கட்ட தடை விதித்து கடந்த 2016ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்த கோரி ஸ்ரீபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிட மாற்றம்
 

சென்னை நெற்குன்றம் பகுதியில் விதிகளை மீறி ரூபஸ், ஆல்பர்ட் ஆகியோர் கட்டிடம் கட்ட தடை விதித்து கடந்த 2016ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை அமல்படுத்த கோரி ஸ்ரீபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மாநகராட்சி தரப்பில் வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். அதை நோட்டீஸில் ஏன் குறிப்பிடவில்லை என கேள்வி நீதிபதிகள், ஐந்து ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். நோட்டீஸ் அனுப்பியதோடு பணி முடிந்து விட்டதாக எண்ணி மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்குடன் செயல்படுவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் அனுமதியில்லா கட்டுமானங்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்க வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், கடந்த 2016 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் அதை செயல்படுத்தாமல் இருந்த அதிகாரி மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் மாநகராட்சி செயற்பொறியாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.