×

சென்னையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 85 ஆயிரத்தை நெருங்குகிறது!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதனால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனா
 

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதனால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன.

இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி கொரோனா விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனா உறுதியான 99,794 பேரில் 84,916பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 2,113 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் ஆண்கள் 59.21சதவீதம் மற்றும் பெண்கள் 40.79 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 84,916 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.