×

விவேக் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை: வதந்தி பரப்பினால்… பிரகாஷ் எச்சரிக்கை!

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 15 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார். விவேக்கின் மரணம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக்கிற்கு மாரடைப்பு வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது
 

நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 15 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார். விவேக்கின் மரணம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக்கிற்கு மாரடைப்பு வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை, தடுப்பூசிக்கும் விவேக்கின் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் விவேக்கிற்கு வந்த மாரடைப்பு ஒரே நாளில் வரக்கூடியது அல்ல என்றும் விளக்கம் அளித்திருந்தது. இதை ஏற்க மறுக்கும் நெட்டிசன்கள், தடுப்பூசி போட்டதாலேயே விவேக் உயிரிழந்ததாக தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தடுப்பூசிக்கும் நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை. தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரகாஷ், கடந்த ஆண்டு கட்டுப்பாட்டு மையம் மூலம் 2 லட்சம் அலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் அளிக்கப்படுகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேலும் கடும் கடுமையாக்கப்படும். திருமண மண்டபம், ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.